உள்ளூர் எழுத்து வடிவங்களை உபயோகித்து பன்மொழி இணையத்தளமொன்றை இலங்கைச் சமூகத்தினர் தயார் செய்கின்றனர்
உயர் மட்ட டொமைன் பெயர்களுக்காக சிங்கள மற்றும் தமிழ் எழுத்து வடிவங்களைச் செயல்படுத்துவது குறித்த வேலை தொடங்குகிறது
கொழும்பு, இலங்கை… ஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர்கள் மற்றும் இலக்கங்களுக்கான இணையக் கூட்டுத்தாபனம், அதாவது The Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) என்ற அமைப்பும் கொள்கை, தொழில்நுட்ப மற்றும் மொழியியல் துறைகளைச் சேர்ந்த உள்ளூர் வல்லுநர்களும் சர்வதேச மயப்படுத்தப்பட்ட களப் பெயர், அதாவது Internationalized Domain Name (IDN) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, சிங்கள தலைமுறைக் குழுவை, அதாவது சிங்கள Generation Panel (GP)-ஐ அங்குரார்ப்பணம் செய்வதற்கு இன்று கொழும்பில் ஒன்றுகூடினர். இந்த அங்குரார்ப்பணம், சிங்கள மொழியிலுள்ள இணையத்திற்கு பாதுகாப்பான, நிலையான அணுகலை விருத்தி செய்வதற்காக உள்ளூர்ச் சமூகம் பங்களிக்கின்ற கிளர்வூட்டுகின்ற ஒரு எதிர்காலத்தைக் குறிப்பிடுகிறது.
ஆசிய பசிபிக் பிராந்தியமானது மொழியியல் ரீதியில் பல்வகைத்தன்மையானது. உலகிலுள்ள 6,800 மொழிகளில், கிட்டத்தட்ட அரைவாசி அல்லது 3,500 மொழிகள் ஆசிய பசிபிக் நாடுகளில் (APAC) பேசப்படுகின்றன. உலகில் மிக அதிகமாகச் பேசப்படும் முதல் 30 மொழிகளில் 21 மொழிகள் இந்தப் பிராந்தியத்தில் பேசப்படுகின்றன. இவ்வாறான பல்வகைத்தன்மை இருப்பது இணைய டொமைன் பெயருக்கான இடத்திற்குச் சவால்களை அதிகரிக்கிறது.
"IDNகள் என்பவை வித்தியாசமான எழுத்து வடிவங்கள் மற்றும் எழுத்து அமைப்புகளின் எழுத்துகளால் அல்லது எழுத்துக்குறிகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் டொமைன் பெயர்களாகும். அவை, சிங்களம், தமிழ், தாய், சீனம், இந்தி மற்றும் பிற மொழிகள் உட்பட, உலகளாவிய மொழிகளில் டொமைன் பெயர்களை உபயோகிக்கும் சாத்தியக்கூறை அளிக்கின்றன. அதனால், கோடிக் கணக்கான பயனர்களுக்கு சிறந்த நெகிழ்தன்மையையும் வாய்ப்புகளையும் கொண்ட உண்மையிலேயே பன்மொழியான இணையத்தை வழங்குகிறது" என்றார் ICANN-இன் IDN திட்டப் பணிப்பாளரான சர்மத் ஹுசைன் அவர்கள்.
"இணையத்தைப் பொறுத்தவரை, அதைப் உபயோகிப்பவர்கள் அவர்களுடைய சொந்த மொழிகளையும் எழுத்து வடிவங்களையும் கொண்டு ஒன்லைனுக்கு வரும் ஆற்றல் ஒரு முக்கிய அபிவிருத்தியாகும். இலங்கையில் சிங்களம் பொதுவாகப் பாவிக்கப்படும் ஒரு மொழியாக இருப்பதால், சிங்கள GP மேற்கொள்ளும் பணியானது, முழு டொமைன் பெயர்களையும் சிங்கள மொழியில் அனுமதிப்பதற்கான அடித்தளத்தை இடும்.
சிங்கள GP-இல் இரண்டு சக தலைவர்களும், கொள்கை, மொழியியல் துறைகளைச் சேர்ந்த பல உள்ளூர்ச் சமூகப் பிரதிநிதிகளும் அடங்குவதோடு, சிங்கள மொழியில் கணினி மென்பொருட்களை உருவாக்குதல், யூனிகோட் மற்றும் இணையத்தின் டொமைன் பெயர் அமைப்பு முதலியவற்றில் தொழில்நுட்ப வல்லமையுள்ள அங்கத்தவர்களும் கூட அடங்குவர்.
சிங்கள GP-இன் சக தலைவரான ஹர்ஷா விஜயவர்த்தன கூறுகையில், "இந்தப் புதிய அபிவிருத்தி குறித்து நாங்கள் எல்லோருமே மிக அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். சிங்கள GP எழுத்து வடிவத்திற்கான மூல மண்டலச் சிட்டை உருவாக்க விதிகளை உருவாக்குவது குறித்து வேலை செய்வார்கள். இதில் முக்கியமான தொழில்நுட்ப ரீதியான வேலை சம்பந்தப்படும், அதாவது சிங்கள எழுத்து வடிவத்தில் சரியான உயர் மட்ட டொமைன் பெயர்களை உருவாக்குவது என்பதை விளங்கிக்கொள்ள, கணினிகளுக்கான விதிகளை உருவாக்குதல் முதலியவை. சிங்கள மொழியில் முழு டொமைன் பெயர்களை அனுமதிப்பதற்கான அடிப்படையை அமைக்க எங்களுடைய முயற்சிகள் உதவும்."
இந்தக் கிழமையின் ஆரம்பத்தில், வேலைத் திட்டத்தையும் அடுத்து எடுக்கவுள்ள படிகள் பற்றியும் கலந்துரையாடுவதற்கு, சிங்கள GP ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டது. நியோ-பிராமி GP-உம் கூட இந்தக் கிழமை கொழும்பில் இருக்கிறது. இக்குழுவைச் சேர்த்தவர்கள், இலங்கையில் பொதுவாக உபயோகிக்கப்படும் அடுத்த மொழியான தமிழ் உட்பட, ஒன்பது நியோ-பிராமி எழுத்து வடிவங்களுக்கான சிட்டை உருவாக்க விதிகளை அமைக்கிறார்கள். சிங்கள மற்றும் நியோ-பிராமி ஆகிய இரு GPகளின் வேலையும் முடியும் போது, இலங்கையர்கள் அவர்களுடைய எழுத்து வடிவங்களிலும் மொழிகளிலும் டொமைன் பெயர்களை உபயோகிக்கின்ற இணைய டொமைன் பெயர் கிடைக்கப்பெறுவதை எதிர்பார்க்கலாம்.
அரபிக், ஆர்மேனியம், சிரில்லிக், எத்தியோப்பிக், ஜியோர்ஜியன், கெமர், லாவோ மற்றும் தாய் முதலிய எழுத்து வடிவங்களுக்கான வேலையை அவற்றுக்குரிய GPகள் முடித்துவிட்டனர். ICANN தற்போது இந்த நான்கு அரிச்சுவடிகளுக்குமான GPகளை உருவாக்குவதற்கு தன்னார்வத் தொண்டர்களை அழைக்கிறது: ஹீப்ரூ, மியன்மார், திபேத்தன் மற்றும் தானா.
பன்மொழி இணையத்தைச் செயல்படுத்துதல் - மேலதிக தகவல்
உள்ளூர் எழுத்து வடிவத்தில் பெறுமதிமிக்க உயர் மட்ட டொமைன்களை (TLDகள்) உருவாக்குவதற்கான விதிகளை அமைப்பதற்கும் கூடுதலாக, கணினிகளுக்கான மென்பொருள் உருவாக்க அமைப்புகள் பலவும் புதிய டொமைன் பெயர்களை அடையாளம் காணவோ அல்லது தகுந்த வகையில் செயலாக்கவோ மாட்டா என்பதால் அவற்றை மேம்படுத்தவும் வேண்டும், TLD அல்லது IDN ஆனது மூன்று எழுத்துக்குறிகளை விட நீண்டதாக இருப்பது அல்லது மாற்று வடிவமைப்பில் இருப்பது இதற்கான முக்கிய காரணமாக இருக்கக் கூடும். இந்தப் புதிய நீட்டிப்புகளை ஒருங்கிணைக்கும் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் இதுவே உண்மை.
ICANN அனுசரணையளிக்கும் The Universal Acceptance Steering Group (UASG) என்பது, விழிப்பூட்டலை உருவாக்குதல் மற்றும் டொமைன் பெயர்களை முழுதளவில் ஏற்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கும் பிரச்சனைகளை அடையாளங்காணுதல் மற்றும் தீர்த்துவைத்தல் ஆகியவை குறித்து பணியாற்றுகின்ற சமூகம் வழிநடத்தும், இணையத் தொழிற்துறை வாரியான ஒரு முன்முனைவு ஆகும். மேலும் அறிவதற்கு அல்லது முழுதளவில் ஏற்பதுடன் சம்பந்தப்பட்ட சிக்கலை முறையிடுவதற்கு, தயவுசெய்து www.uasg.tech என்ற இணையத்தைப் பாருங்கள்.
####
IDNகள் பற்றிய மேலதிகத் தகவலுக்கு, தயவுசெய்து இங்கே செல்லுங்கள்.
UA பற்றிய மேலதிகத் தகவலுக்கு, தயவுசெய்து இங்கே செல்லுங்கள்.
ஊடகத் தொடர்புகள்
ICANN
லியானா தியோ
தகவல்தொடர்புகள் தலைவர், APAC
தொ.பே: +65 6816 1259
மொபைல்: +65 9796 5500
மின்னஞ்சல்: liana.teo@icann.org
ஃபியோனா ஆவ்
உலகளாவிய தகவல்தொடர்புகள் இணைப்பாளர்
தொ.பே: +65 6816 1264
மொபைல்: +65 9113 6621
மின்னஞ்சல்: fiona.aw@icann.org
ICANN பற்றிய அறிமுகம்
ICANN-இன் நடவடிக்கையானது, நிலையான, பாதுகாப்பான மற்றும் ஒன்றுபட்ட உலகளாவிய இணையத்தை உறுதிப்படுத்த உதவுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இணையத்திலுள்ள இன்னொருவரைத் தொடர்புகொள்வதற்கு, நீங்கள் உங்களுடைய கணினியில் ஒரு முகவரியை, பெயரை அல்லது இலக்கத்தைத் தட்டச்சுச் செய்ய வேண்டும். கணினிகள் ஒன்றையொன்று எங்கே கண்டுபிடிக்கலாம் என்பதை அறியும் வகையில், அந்த முகவரி தனித்துவமானதாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்தத் தனித்துவ அடையாளங்காட்டிகளை ஒருங்கிணைத்து, ஆதரிப்பதில் ICANN உதவுகிறது. ICANN ஆனது இலாப நோக்கற்ற பொதுமக்கள் நற்பலனுக்கான ஒரு கூட்டுத்தாபனமாகவும், உலகெங்கிலுமிருந்து பங்கேற்பாளர்களைக் கொண்ட ஒரு சமூகமாகவும் 1998 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
